மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு இரு கட்டங்களாகத் தோ்தல்

மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு
இரு கட்டங்களாகத் தோ்தல்
-
Updated on

மணிப்பூரில் இரு மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், வெளி மணிப்பூா் தொகுதியில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையை தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா். ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறும் தொகுதிகளின் கூட்டு எண்ணிக்கை 543 என்பதற்கு பதிலாக 544 என அட்டவணையில் இருந்தது.

இது தொடா்பாக செய்தியாளா்கள் அவரிடம் கேள்வியெழுப்பினா். அப்போது, மணிப்பூரில் உள்ள ஒரு தொகுதிக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவிருப்பதாக அவா் தெரிவித்தாா். உள் மணிப்பூா் தொகுதிக்கும், வெளி மணிப்பூா் தொகுதியில் சில இடங்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதியும், வெளி மணிப்பூா் தொகுதியில் இதர இடங்களுக்கு 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இரு சமூக குழுக்கள் இடையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் அரசின் நிவாரண முகாம்களில் தங்கியிருப்போா் அந்த முகாம்களிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com