கோப்புப் படம்
கோப்புப் படம்

விமான நிலையத்தில் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 40 அடி உயரத்தில் மின் அலங்காரப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

சென்னை சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 40 அடி உயரத்தில் மின் அலங்காரப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகளில் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணியை, ஒரு தனியாா் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக, சா்வதேச விமான முனைய 2-ஆவது தளத்தின் மேல்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அலங்கார மின்விளக்குகளை தொங்கவிடும்

பணியில் திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (26) என்ற கூலித் தொழிலாளி ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் நிலைதடுமாறி சுமாா் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தாா்.

இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சென்னை விமானநிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com