சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு குதிரை பேரம் வழக்கு: அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு! நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ் வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்த ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணம்: குருவாயூர் கோயிலில் திருமணம்! கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மு.க. ஸ்டாலின் தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (நவ. 7) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

வில்லன் ஆகிறார் ஸ்ரீகாந்த்!

சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள புதிய படம் "ரசிக்கும் சீமானே'. இதில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். நவ்யா நாயர் முக்கிய வேடத்தில் நடி

Updated On :

சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள புதிய படம் "ரசிக்கும் சீமானே'. இதில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். நவ்யா நாயர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குநர் கூறியதாவது:

  இந்தப் படத்துக்கு முதலில் "எட்டப்பன்' என்ற பெயரை வைத்திருந்தோம். அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரவே, பெயரை "ரசிக்கும் சீமானே' என மாற்றியுள்ளோம். இதில் ஸ்ரீகாந்த் இதுவரை யாரும் நடித்திராத அளவுக்கு வித்தியாசமான "ஆன்டி-ஹீரோ'வாக நடித்திருக்கிறார். நகரில் வாழும் பெரிய மனிதர்களின் பலவீனங்களை அறிந்து அவர்களை "ப்ளாக்மெயில்' செய்வதுதான் அவருடைய வேலை. அவருடைய வாழ்க்கையில் நவ்யா நாயர் குறுக்கிட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறோம். இதில் ஸ்ரீகாந்துக்குத் "தொழில்' கற்றுத்தரும் தாதா வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன; ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.