
சென்னை, நவ. 28: செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி, தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், பத்திரிகையாளர் நவீனன் உள்பட 66 பேருக்கு தமிழக அரசின் "கலைமாமணி' விருதுகளை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.
விருது பெற்ற அனைவருக்கும் பொற்பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அணிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது பெற்றவர்கள்:
இயல்: சரோஜ் நாராயணசுவாமி (செய்தி வாசிப்பாளர்), அவ்வை நடராஜன் (தமிழ் அறிஞர்), ஆ. மாதவன் (சிறுகதை -நாவல் ஆசிரியர்), சிற்பி பாலசுப்பிரமணியன், ஆண்டாள் பிரியதர்ஷினி (கவிஞர்கள்), பெரு. மதியழகன், சரளா ராஜகோபாலன் (இலக்கிய ஆய்வாளர்கள்), எஸ். மாசிலாமணி (பேச்சாளர்), சுகி. சிவம் (சமய சொற்பொழிவாளர்).
இசை: சீர்காழி ஆர். ஜெயராமன், எம்.எஸ். முத்தப்ப பாகவதர் (இசை ஆசிரியர்கள்), எஸ். சீனிவாசன், வீ.செ. சிவகுமார் (குரலிசைக் கலைஞர்கள்), வெ. தாயன்பன் (இசையமைப்பாளர்), எஸ். கண்ணன் (வயலின் கலைஞர்), வழுவூர் ரவி (மிருதங்கக் கலைஞர்), டிரம்ஸ் சிவமணி (டிரம்ஸ் கலைஞர்), எஸ். சதாசிவன், வீரமணி ராஜூ (இறையருட் பாடகர்கள்), வி.சா. குருசாமி தேசிகர் (இயற்கலை பண்பாட்டுக் கலைஞர்), டி.வி. ராஜகோபால் பிள்ளை, எஸ்.வி. மீனாட்சி சுந்தரம் (நாதசுரக் கலைஞர்கள்), டி.எம். ராமநாதன், ஆ. மணிகண்டன் (தவில் கலைஞர்கள்).
நாட்டியம்: ஷைலஜா (பரத நாட்டிய ஆசிரியர்), சங்கீதா கபிலன், கயல்விழி கபிலன், ஜஸ்வர்யா ரஜினிகாந்த், ஜாகீர் உசேன், வசந்தா வைகுந்த் (பரத நாட்டியக் கலைஞர்கள்)
நாடகம்: கே.என்.ஆர். ராஜாமணி (நாடக நடிகை), மு. ராமசாமி (நாடக ஆசிரியர்), ந. முத்துசாமி (நாடகத் தயாரிப்பாளர்), வி.ஒய். தாஸ் (நாடக அரங்க அமைப்பாளர்)
திரைப்படம்: அபிராமி ராமநாதன் (தயாரிப்பாளர்), சுந்தர். சி, பரத், வினீத் (நடிகர்கள்), அசின் (நடிகைகள்), மா. பசுபதி (குணச்சித்திர நடிகர்), ஆர். வையாபுரி (நகைச்சுவை நடிகர்), வேதம் புதிது கண்ணன் (வசன கர்த்தா), ஹாரிஸ் ஜெயராஜ் (இசையமைப்பாளர்), ஆர்.டி. ராஜசேகர் (ஒளிப்பதிவாளர்), பி. கிருஷ்ணமூர்த்தி (கலை இயக்குநர்), சித்ரா சுவாமிநாதன் (புகைப்படக் கலைஞர்), நவீனன் (பத்திரிகையாளர்)
இசை நாடகம்: சி. டேவிட் (மிருதங்கக் கலைஞர்), ச. அர்ஜுனன் (ஆர்மோனியக் கலைஞர்)
கிராமியக் கலை: ஆர். விஸ்வநாதன் (தெருக்கூத்துக் கலைஞர்), அ. சங்கரபாண்டியன் (காவடியாட்டக் கலைஞர்), ந. வேலவன் சங்கீதா (வில்லுப்பாட்டுக் கலைஞர்), பொ. கைலாசமூர்த்தி (ஓயிலாட்டக் கலைஞர்), சா. முத்துக்குமார் (காளியாட்டக் கலைஞர்)
சின்னத்திரை: சுந்தர் கே. விஜயன், வே. திருச்செல்வன் (இயக்குநர்கள்), பாஸ்கர் சக்தி (கதை வசன கர்த்தா), வி.பி. அபிஷேக் (நடிகர்), அனுஹாசன் (நடிகை), தெ.அமர சிகாமணி (குணச்சித்திர நடிகர்), மா. தேவிப்பிரியா (நடிகை), எம்.எம். ரெங்கசாமி (ஒளிப்பதிவாளர்), ரமேஷ் பிரபா (நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
ஓவியம்: ஓவியர் என். சீனிவாசன். பண்பாட்டுக் கலை பரப்புநர்: கோ. மணிலால்.
பொற்கிழி பெற்றவர்கள்: ஏற்கெனவே கலைமாமணி விருதுபெற்ற நாடக நடிகர் டி.என். கிருஷ்ணன், இசை நாடகப் பாடலாசிரியர் என்.எஸ். வரதராஜன், புரவியாட்டக் கலைஞர் டி.சி. சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ. 15 ஆயிரம் மதிப்புடைய பொற்கிழியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சிறந்த நாடகக் குழு: ஆடுதுறை ஸ்ரீ சங்கர நாராயண சபா, மா.இரா. திருவையாறு தமிழிசை மன்றம் ஆகிய கலை அமைப்புகளுக்கு சிறந்த நாடகக் குழுவுக்கான சுழற்கேடயங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
விருது பெற வராதவர்கள்:நடிகைகள் சரோஜா தேவி, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், இயக்குநர் சேரன், குணச்சித்திர நடிகை ஷோபனா, பரதநாட்டியக் கலைஞர் ஸ்வேதா கோபாலன் ஆகியோர் விருது பெற வரவில்லை.
விருது பெறும் பட்டியலில் இடம் பெறாத நடிகர் வினீத்துக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.