ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

பிரபலங்களை நம்பாத "ஐவர்'

பாசில், பார்த்திபன் ஆகியோரிடம் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ஏ.ஜி.ராஜா "ஐவர்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதுல்யா, இந்தப் படத்தில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:38 pm IST

பாசில், பார்த்திபன் ஆகியோரிடம் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ஏ.ஜி.ராஜா "ஐவர்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதுல்யா, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புதுமுகங்களுடன் ஸ்ரீமன், சன் டி.வி. ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

  ஆபாவாணன், எழில் ஆகியோரிடம் பணியாற்றிய என்.பிரியன் படத்தை இயக்குகிறார். "ஐவர்' பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது...

  ""பொறுப்பில்லாமல் அலையும் நான்கு இளைஞர்களுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பை வித்தியாசமான கோணத்தில் சொல்வதுதான் கதை. இப்போதெல்லாம் நட்சத்திரங்கள் யார்?, பட்ஜெட் எவ்வளவு? என்பதை விட படத்தின் கதை, என்ன புதிய விஷயம் இருக்கிறது என பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாறுபட்ட அம்சங்கள் இருப்பதால் பிரபலங்களை நம்பாமல் புதுமுகங்களை நம்பி தைரியமாகக் களமிறங்கியுள்ளோம். கதை திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. படத்தின் திருப்புமுனையாக இடம்பெறும் திருவண்ணாமலை தீபத் திருவிழா காட்சியை சிறப்பு அனுமதி பெற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்துக்கிடையே படமாக்கினோம். எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாத இறுதியில் படம் வெளியாகிறது'' என்றார்.

  இசை -கவி பெரிய தம்பி. பாடல்கள் -நா.முத்துக்குமார், பழனிபாரதி. ஒளிப்பதிவு -சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.