பா.ர.பழனிச்சாமி

தங் கம் ரியல் பிக் சர்ஸ் நிறு வ னம் சார் பில் பி.தங் கவேல் தயாரித்து இயக்கும் புதிய படம் 'பா.ர.பழனிச்சாமி'. சுமார் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபல நடன இயக்குநரும், பிரபுதேவாவின் தந்தையுமான மாஸ்
பா.ர.பழனிச்சாமி
Updated on
1 min read

தங் கம் ரியல் பிக் சர்ஸ் நிறு வ னம் சார் பில் பி.தங் கவேல் தயாரித்து இயக்கும் புதிய படம் 'பா.ர.பழனிச்சாமி'. சுமார் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபல நடன இயக்குநரும், பிரபுதேவாவின் தந்தையுமான மாஸ்டர் சுந்தரம் இப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.

''சக மனிதர்களை நேசித்து, நற்குணத்தோடு வாழும் ஒருவர் - தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நேர் மாறான மனிதராக மாறுகிறார் அவரது மாற்றத்துக்கான காரணமும் மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும் என்ன என்பதே கதை.

இந்தப் படத்தில் இடம்பெறும் 'நேற்று அது உனக்கு, இன்று அது எனக்கு, நாளை அது யாருக்கு...' என்ற பாடலில் மாஸ்டர் சுந்தரத்துடன் அவரது மகன்கள் பிரபுதேவாவும், ராஜுசுந்தரமும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடல், பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகும். தருமபுரி, சேலம், ஊட்டி ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது'' என்கிறார் இயக்குநர்.

இசை - தினா. பாடல்கள் - சுரேஷ் தேவராஜ். ஒளிப்பதிவு - ஆனந்த் ஜெயராஜ். கலை - நித்தியானந்தம். படத்தொகுப்பு - சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com