விஜய் டி.வி.யின் காதல் இசை நிகழ்ச்சி

1960 முதல் 2010 வரையில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் காதல் பாடல்களுக்கென விஜய் டி.வி. ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. ஐம்பதாண்டு கால காதல் பாடல்களை ஒரே மேடையில் முற்றிலும் இ
விஜய் டி.வி.யின் காதல் இசை நிகழ்ச்சி
Updated on
1 min read

1960 முதல் 2010 வரையில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் காதல் பாடல்களுக்கென விஜய் டி.வி. ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஐம்பதாண்டு கால காதல் பாடல்களை ஒரே மேடையில் முற்றிலும் இளையதலைமுறைப் பாடகர்களின் குரலில் ஒலிக்கச் செய்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இதற்காக, தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 'மாஷ்பிட்' என்ற புதிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகளின் ராக் இசை நிகழ்ச்சியில் இடம்பெறுவது போல ரசிகர்கள் மேடைக்கு மிக அருகில் சென்று உற்சாகமாக நிகழ்ச்சியை ரசிக்கவும் நடனமாடவும் செய்யலாம்.

இதில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஷ்ருதிஹாசன் பங்கேற்று காலத்தால் அழியாத பல பழைய மற்றும் புதிய காதல் பாடல்களைப் பாடுகிறார். அவருடன் நேகாபஸின், சுனிதாசாரதி, பிளாசே, ஹரிசரண், விஜய்பிரகாஷ் போன்ற பிரபல இளம் பாடகர்களும் இணைந்து பாடுகிறார்கள்.

இந்த இசை நிகழ்ச்சி, சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) வரும் சனிக்கிழமை (மார்ச் 27) மாலை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சென்னை நுங்கம்பாக்கம், ஜகன்னாதன் சாலையில் உள்ள விஜய் டி.வி. அலுவலகத்தில் நேரில் (வியாழக்கிழமை மட்டும்) பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

இந்த காதல் இசை நிகழ்ச்சியின் தொகுப்பு, ஏப்ரல் 14}ம் தேதி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com