வர்மம்

கிரசண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "வர்மம்.' கதாநாயகனாக அகிலன் என்பவர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கேரளத்து மாடல் அனகா நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலாசிங், மீராகிருஷ்ணன், ப
வர்மம்
Updated on
1 min read

கிரசண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "வர்மம்.' கதாநாயகனாக அகிலன் என்பவர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கேரளத்து மாடல் அனகா நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலாசிங், மீராகிருஷ்ணன், புரோட்டா சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை நகரில் நடக்கும் கொலைகளுக்குக் காரணமானவர்கள், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் ஆகியோர் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் கதாநாயகிதான் என்பதை அறியாத கதாநாயகன் அவள் மீது காதல் கொள்கிறான். திடீரென தான் காதலிப்பவள் பல கொலைகளை செய்திருக்கும் பெண் என்பது தெரிந்து அதிர்ந்து போகிறான் கதாநாயகன். பின் என்ன நடக்கிறது என்பதை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லுவதுதான் கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு - பால்கிரகோரி. இசை - மீராலால், பாடல்கள் - கவிமுகில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com