
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலு ஆனந்த், மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
தற்போது அவர் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' எனும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் சத்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உதாஷா நடிக்கிறார். மற்றும கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி, ரஷியா ரித்விகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், எல்.ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலு ஆனந்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சபேஷ் முரளி இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதுகிறார். சிபி சாம் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சிபி சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் பாலு ஆனந்த் கூறியதாவது: “பெங்களூரில் போலீஸ் ரெகார்ட் மற்றும் பத்திரிக்கைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான் அவன் எப்படி இறந்தான், எப்படி வாழ்கிறான் என்பது தான் கதை. அப்படி தமிழ் நாட்டில் வாழும் ஒருவனது காதல் கதையை காமெடியாக உருவாக்கி இருக்கிறோம். கதையை கேட்கும்போது ஆக்ஷன் படம் மாதிரி தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படம்” என்றார்.
பாலு ஆனந்த் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் சத்யராஜ் நடித்த ‘அண்ணா நகர் முதல்தெரு’ உட்பட பதினைந்து படங்களை இயக்கியும் இருப்பவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.