
ஏவிஏ புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப்படத்தின் மூலம் இயக்குனர் ஜெயம் ராஜா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் மானு, நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
அறிமுக இயக்குனர் குருரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாகா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேற்று திமுக தலைவரான மு.கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நான்கு குழந்தைகளையும் அழைத்து தனது வாழ்த்தினை தெரிவித்தார் .
மேலும், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கருணாநிதி அவர்களுக்கு அழகு தமிழ் பெயர் சூட்ட விரும்பி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அக்ஷிதிக்கு ரோஜா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.
கலைஞரிடம் வாழ்த்து பெற்றதையடுத்து பெற்றோர்கள் நான்கு குழந்தைகளின் பெறோர் மகிழ்ச்சியடைந்தனர் .
சமீபத்தில் வெளியான “என்ன சத்தம் இந்த நேரம்” படத்தின் பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் நல்ல வரவேப்பைபெற்றுள்ளது.
அழகு குழந்தைகளின் அமர்க்களமான நடிப்பை விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம்.