கலை வேந்தன் படத்திற்காக போடப்பட்ட செட்டை பார்த்து வியந்த நடிகர், நடிகைகள்!

அதற்கு பல இடங்களில் தேடியும் சரியான இடம் அமையாததால் நாங்களே அதற்காக சுமார் ஏழு லட்சங்கள் செலவு செய்து பிரமாண்டமாக மிகப்பெரிய செட் அமைத்து அதில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தினோம்.
கலை வேந்தன் படத்திற்காக போடப்பட்ட செட்டை பார்த்து வியந்த நடிகர், நடிகைகள்!
Published on
Updated on
1 min read

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம் “கலை வேந்தன்“. கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார்.

இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர். மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான். படத்தை ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார். இவர் திரைப்பட கலூரியில் பயிற்சி பெற்றதுடன் கனடாவிலும் இயக்குனர் பயிற்சிப்பெற்றிருக்கிறார். எஸ்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர்.... ஓவினாம் என்ற தற்காப்புகலையின் மாஸ்டராக இருக்கும் நாயகன் ஒரு சிறிய பிரச்னையில் நாயகியை சந்திக்க மோதல் காதலாகிறது இவர்களின் காதலுக்கு நாயகியின் பெற்றோர் மூலம் எதிர்ப்பு வருகிறது.

இதற்கிடையே தொழில் விஷயத்தில் உள்ளூர் ரவுடி ஒருவனிடம் நாயகன், நாயகி இருவரும் பகையாகிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு மர்ம கும்பலால் நாயகி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட கொலைப்பழி நாயகன் மீது விழுகிறது.

இந்த பிரச்னையில் இருந்து நாயகன் மீண்டாரா, உண்மை கொலையாளி யார் என்ற கோணத்தில் கதை சஸ்பென்ஸ் த்ரில்லர், காமெடி மற்றும் பரபரப்பான சண்டை காட்சிகளோடு விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லப்பட்டிருகிறது. இந்த படத்தில் ஓவினாம் என்ற தற்காப்பு கலை இடம் பெறுவதால் அதற்காக பெரிய பயிற்சி பள்ளி ஒன்று தேவைப்பட்டது.

அதற்கு பல இடங்களில் தேடியும் சரியான இடம் அமையாததால் நாங்களே அதற்காக சுமார் ஏழு லட்சங்கள் செலவு செய்து பிரமாண்டமாக மிகப்பெரிய செட் அமைத்து அதில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தினோம். அதை பார்த்து நிஜ பயிற்சி பள்ளி என்று நினைத்து அருகில் உள்ள மக்கள் கூட்டம் கூடியது. அதனால் நங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பட பிடிப்பை நடத்தி முடித்தோம். இந்த பயிற்சி பள்ளி செட்டை பார்த்து ஆரம்பத்தில் நிஜம் என்று நினைத்து அதில் நடித்த நடிகர், நடிகைகளே ஆச்சர்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது என்று கூறினார் இயக்குனர் ஆர்.கே.பரசுராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com