திருமண வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு...ராணி முகர்ஜி

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி இந்த ஆண்டு யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ்அதிபர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்
திருமண வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு...ராணி முகர்ஜி
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி இந்த ஆண்டு யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் அதிபர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 2015 வோக் இதழில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் தான் நடித்துள்ள படங்கள் பற்றியும், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் திரைப்பட தயாரிப்பிலோ, இயக்கத்திலோ ஈடுபடப் போகிறீர்களா?

செய்யக் கூடாது என்று இல்லை. நான் விருப்பப்பட்டால் அதை யாரும் தடுக்கப்போவதில்லைதான். இருந்தாலும், இந்த நிறுவனம் மிகவும் கடினமான உழைப்பினால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறது. என் கணவர் ஆதி கடின உழைப்பாளி. அவர்தான் முதல் ஆளாய் வருவார். வேலை முடிந்து கடைசி ஆளாய் தான் செல்வார். அப்படிப்பட்ட அவரின் உழைப்பு இந்த உயர்விற்கு ஒரு முக்கிய காரணம். அதை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதால், நான் செய்யும் எந்தவொரு காரியத்தினாலும் அவருக்கு சின்ன சிரமம்கூட வந்துவிடக்கூடாது என்கிற கூடுதல் அக்கறையோடு, எது செய்வதானாலும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டு என்னை நிதானிக்க வைக்கிறது. தற்சமயம் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறேன். வேறு எந்த வேலையும் செய்யாமல்.

அடுத்த ஐந்து ஆண்டு காலத் திட்டங்கள்?

சில தரமான பெண்ணிய படங்களில் நடிக்க வேண்டும். பிறகு அன்பான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவரின் சமீபத்திய படங்களான நோ ஒன் கில்ட் ஜெஸிகா மற்றும் மார்தானி போன்ற படங்கள் அவருக்கு நிறைவான மரியாதையை பெற்றுத் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் தன்னுடைய கணவர் ஆதித்யா, ஷாருக்கான், அமீர்கான் என்கிறார்.

ஆதித்ய சோப்ராவிற்கு தன்னை ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார். பின்னர், 1998-ல் விக்ரம் பட்டிற்கும், முகேஷ் பட்டிற்கும்  குலாம் பட நாயகன் அமீர்கான் தன்னை சிபாரிசு செய்தார். அதனால் தான் தன்னால் குலாம் படத்தில் அறிமுகமாக முடிந்தது என்கிறார். ஆகவே அந்த மூன்று நபர்களுக்கும் என்னுடைய நன்றி என்றென்றைக்கும் உண்டு என்கிறார்.

கரன் ஜோகர் கோபக்காரர். குச் குச் ஹோத்தா ஹை படத்திற்காக என்னை எடையை குறைக்கச் சொன்னார். அப்படியே செய்தேன். 20 வயதிலேயே 37 வயது பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் குழப்பத்தில் எந்த முடிவையும் எடுத்ததில்லை. ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தெளிவாகவே எனக்கான முடிவுகைள எடுக்கிறேன் என்று அந்த பேட்டியில் தீர்க்கமான பார்வையோடு தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com