தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செல்போன் தொழிலதிபரைத் திருமணம் செய்கிறார் நடிகை அசின்!

கஜினி படத்தில் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலிப்பார் அசின். அதேபோல.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2015, 10:56 am

கஜினி படத்தில் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலிப்பார் அசின். அதேபோல அவருடைய நிஜவாழ்க்கையிலும் நடந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அசின் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: என்னுடைய எல்லா சினிமா வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன். அப்போதுதான் என்னால் என் சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய காதலர் ராகுல் சர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.