கோலிவுட்டை பிடித்த நோய்

இன்று டாக்டர்கள் தினமாம். கோலிவுட் திரைகளில் டாக்டர்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு சிறப்புக் கதாபாத்திரங்களும் விசித்திர நோய்களும் நம்பமுடியாத தீர்வுகளும் உண்டு. ஒரு
Updated on
3 min read

இன்று டாக்டர்கள் தினமாம். கோலிவுட் திரைகளில் டாக்டர்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு சிறப்புக் கதாபாத்திரங்களும் விசித்திர நோய்களும் நம்பமுடியாத தீர்வுகளும் உண்டு. ஒரு ஜாலி அலசல்.

கேன்சருக்கே முதலிடம்

வாழ்வே மாயத்தில் ஆரம்பித்து, இதயத்தை திருடாவில் தொடர்ந்து இன்று பூஜை போடப்பட்ட படங்கள் வரை பல சினிமாக்களில் கொடுமையான வியாதி என்பதை கொல்ல ஸாரி சொல்ல கேன்சருக்கே முதலிடம். ஹீரோக்கள் கேன்சர் வந்து ரத்தம் கக்கி திரையில் பரிதாபம் சம்பாதிப்பார்கள். படமும் ஹிட்.

மூளைக் கட்டி என்கிற ப்ரெயின் ட்யூமர்

தமிழ் சினிவாவின் தவிர்க்க முடியாத வியாதி மூளைப் பிரச்னை அதாவது ப்ரெயின் ட்யூமர். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவுக்கு வரும் நோய் இது.

சமீபத்தில் வெளியான உத்தம வில்லனில் உலக நாயகனுக்கு வந்ததும் அதுவே. அதில் அவருக்கு அடிக்கடி தலைவலி வரும். குடும்ப டாக்டர் சோதித்துப்பார்த்து, மூளைக்கட்டி என்று உறுதிப்படுத்தவே அது தீவிர நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. மரணம் நெருங்கவிருக்கும் நிலையில் மனோரஞ்சனின் கனவுகள் என்னவாயின? உத்தம வில்லன் இதுவரை பார்க்கவில்லை என்றால் உங்களால் அதை கற்பனை செய்யவே முடியாது.

இதயமே…..

பல திரைப்படங்கள் ஹீரோ அல்லது ஹீரோயின்கள் அல்லது அவர்களது அப்பாக்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும். ஆடியன்ஸ் பல்ஸ் ரேட்டை எகிற வைக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். இதயமே என்ற படத்தில் முரளிக்கு காதலை சொல்ல முடியாமல் நெஞ்சு வலி வந்துவிடும். ஹார்ட் அட்டாக் என்ற பெயரில் ஒரு தெலுங்கு திரைப்படமே வந்துள்ளது என்றால் அதன் மகத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மாலைக்கண் நோய்

இவர் திரையில் தோன்றினாலே சிரிப்பார்கள்.  சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் இருப்பதை மறைத்து கல்யாணம் முடிந்தபின் படும் அவஸ்தைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல எந்தப் பொண்ணையும் பாக்கமாட்டேன்…நான் தமிழன்…தமிழன் ஐயோ….என்று கவுண்டர் ஏற்ற இறக்கத்துடன் பேசுவது செம ட்ரீட்.

மனநோய்

இது மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல திடீரென்று தலையில் அடிபட்டு ஞாபக மறதி ஏற்பட்டு கடைசியில் நினைவு வர ஹீரோவை திராட்டில் விடும் தமிழ் கூறும் சினியுலகில் நிறைய படங்கள் உண்டு. மனசுக்குள் மத்தாப்பு படத்தில் பிரபு அழகான பைத்தியமாக வந்து டாக்டர் சரண்யாவை கரெக்ட் செய்யும் அளவுக்கு கலக்கியிருப்பார். கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் இந்த கேரக்டருக்கு தத்ரூபமாக உயிரூட்டியிருப்பார் விஜய். பாரதிராஜா, பாக்கியராஜ் மிஷ்கின் என எல்லா இயக்குனர்களின் படங்களிலும் இப்படி ஒரு கேரக்டர் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும். மணிரத்னம் இதிலும் தனித்துவமானவர். ஸ்பெஷல் சில்ரன் என்பவர்களை உலகத்திற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய புண்ணியவான் அவர் தான்.

பெயர் தெரியாத வியாதி

அம்னீஷியா என்ற வியாதி தமிழ் படத்தில் யாருக்கு எப்போது வரும் என்றே சொல்ல முடியாது. வியாதின்னும் பெயரிடப்படாத வியாதிகள், மருத்துவ உலகமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் புதுப்புது நோய்கள் எல்லாம் முதலில் நம் தமிழ் படங்களில் தான் பார்க்க முடியும். உதாரணத்துக்கு தனுஷ் நடித்த பல படங்கள். அதில் அவருக்கு என்ன வியாதி என்று தெரிவதற்குள் பார்க்கும் நமக்கு பல வியாதிகளின் கூட்டணி வந்து விடும்.

இவ்வளவு வியாதிகளை சோதித்து அதற்கு தகுந்த ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர் இந்தப் பாடலைத் தான் முணுமுணுப்பார்கள், ‘மன மன மெண்டல் மனது’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com