ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள கவுர் ஹரி தஸ்தான் - தி ஃபிரீடம் ஃபைல் என்கிற ஹிந்திப் படத்தைப் பார்க்க கமல்ஹாசன் ஆர்வம் காண்பித்துள்ளார். இது ஒரியா சுதந்தரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் படம்.
சுதந்தரப் போராட்ட வீரரைப் பற்றிய படம் என்பதால் படத்தைப் பார்க்க கமல் ஆர்வமாக உள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியது என்பதும் மற்றொரு காரணம். ஆனந்த், கமலுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்துள்ளார்.
வினய் பதக், கொன்கனா சென் சர்மா, திவ்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இதுபற்றி இயக்குநர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, கமல் என்னுடைய முந்தைய படத்தைப் (மீ சிந்துதய் சப்கல்) பார்த்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் உடனே பார்க்க விரும்பினார். தன்னுடைய வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்க்கவும் விரும்பினார். அவர் வீட்டில் கியூப் சர்வர் உள்ள புரொஜக்சன் வசதி உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


