‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லிப் டு லிப் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கிய ஜி.வி. பிரகாஷ்!

மனிஷாவுக்கு இதில் எந்தச் சங்கடமும் ஏற்படவில்லை. காட்சியை விளக்கியபோது உடனே ஓகே சொன்னார்.

News image
Updated On :3 ஜூலை 2015, 8:47 am

ஐஏஎன்எஸ்

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக படமாக்கப்பட்ட லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.

‘இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷூம் மனிஷா யாதவும் முத்தக் காட்சி ஒன்றில் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார். இதைக் கேட்டவுடன் ஜி.வி. பிரகாஷ் ஆரம்பத்தில் தயங்கினார். இந்த யோசனை அவருக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் மனிஷாவுக்கு இதில் எந்தச் சங்கடமும் ஏற்படவில்லை. இந்தக் காட்சியை விளக்கியபோது உடனே ஓகே சொன்னார். ஆனால் ஜிவி பிரகாஷ்வைத்தான் ஊக்கப்படுத்தவேண்டியிருந்தது. பிறகு அவர் சம்மதம் சொன்னார்.

லிப் டு லிப் காட்சி என்பதால் பல்வேறு கோணங்களில் எடுக்கவேண்டியிருந்தது. இதனால் 36 டேக்குகள் வரை செல்லவேண்டியிருந்தது. சரியான கோணத்திலிருந்து எடுக்கவேண்டும் என இயக்குநர் விரும்பினார். அப்போதுதான் இந்தக் காட்சி பார்க்க  அசிங்கமாக இருக்காது. எனவே பல டேக்குகள் எடுக்கவேண்டியாதனது’ என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இந்தப் படத்தோடு, மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். கெட்ட பயடா இந்த கார்த்தி, பாட்ஷா என்கிற ஆண்டனி போன்ற படங்களோடு டார்லிங் இயக்குநருடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.