வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காலையில் 3 மணிக்கே செட்டுக்கு வந்த அஜீத்: உருகும் ‘அப்புக்குட்டி’ சிவபாலன்!

சென்றவாரம், அப்புக்குட்டி என்கிற சிவபாலனை அஜீத் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தது

News image
Updated On :7 ஜூலை 2015, 8:48 am

சென்றவாரம், அப்புக்குட்டி என்கிற சிவபாலனை அஜீத் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தது சமூகவலைத்தளம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டோஷூட் எப்படி நிகழ்ந்தது என சிவபாலன் பேட்டியளித்துள்ளார்.

இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியபோது:

ஒருநாள் மதியம்... ஒரு புது நம்பர்ல இருந்து கால் வருது. நான் சொல்ற இடத்துக்கு காலையில 6 மணிக்கு வந்திடுங்கன்னு சொன்னார் அஜீத் சார். எதுக்கு என்னன்னு கேட்காம போய் நின்னேன்.

அஜீத் சார் என்னை வச்சு போட்டோ ஷூட் பண்ணப் போறார்னு சொன்னாங்க. இதுக்காக காலையில 3 மணிக்கே அவர் செட்டுக்கு வந்து வேலை பார்த்துட்டு இருக்கார்னு சொன்னாங்க. வெலவெலத்துப் போய்ட்டேன்.

விதவிதமான ஸ்டைலான டிரெஸ்களை அஜீத்தே செலக்ட் பண்ணிக் கொடுத்தார். எப்படி ஸ்டைலா லுக் விடணும்னு அஜீத் சாரே செய்து காட்டினார். காலை 8 மணிக்கு ஆரம்பிச்ச போட்டோ ஷூட் இரவு 1 மணி வரை நடந்துச்சு.

என்னோட பல்லுல  காரை படிஞ்சு இருந்தது. அதை அவரோட பர்சனல் டாக்டரை வெச்சு கிளீன் பண்ணவெச்சார். ஸ்பாட்டிலேயே ஃபேஷியல் பண்ணி முகத்தை பளிச்சுன்னு ஆக்கினார். என்னோட வாழ்நாள்ல இந்த போட்டோ ஷூட்டை மறக்கவே முடியாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.