‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாபி சிம்ஹா - ரேஷ்மி காதல் ஜோடிக்கு ஜனவரியில் திருமணம்!

இப்போது சம்மதம் கிடைத்துள்ளதால் ஆகஸ்ட் மாதம் இருவரும் நிச்சயதார்த்தம்; அடுத்த வருட ஜனவரியில் திருமணம்...

News image
Updated On :18 ஜூலை 2015, 10:02 am

ஐஏஎன்எஸ்

பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உறுமீன் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் விரைவில் திருப்பதியில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இதை உடனடியாக மறுத்தார் சிம்ஹா.

இந்நிலையில் பாபி சிம்ஹாவின் தரப்பில் விசாரித்தபோது, ‘முதலில் இந்தக் காதலுக்கு ரேஷ்மி வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் இருவரும் காதலில் உறுதியாக உள்ளதால் மனம் மாறி சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அடுத்த வருட ஜனவரியில் திருமணம்’ என்று தகவல் தெரிவித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.