விஜய் படத்துக்கு மட்டும் சிக்கல்கள் வருவது ஏன்? ரசிகர்கள் குற்றச்சாட்டு!

கமல், விஜய் படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் வாங்குவது சரியல்ல என்கிற கமெண்ட்களை சமூகவலைத்தளங்களில் காணமுடிகிறது.
விஜய் படத்துக்கு மட்டும் சிக்கல்கள் வருவது ஏன்? ரசிகர்கள் குற்றச்சாட்டு!
Updated on
1 min read

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, "புலி' படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 35 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை செய்தார்கள். இதனால் இன்று புலி படத்தின் சிறப்பு மற்றும் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். முதல் படக் காட்சியைப் பார்த்துவிட்டு FDFS விமரிசனத்தை இணையத்தில் எழுதுவதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் வருமான வரிச் சோதனையால் புலி படம் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மிகவும் கோபம் அடைந்து தங்கள் உணர்வுகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இதன் விளைவாக, இந்திய அளவிலான ட்விட்டர் டிரண்டிங்கில் புலி பிரச்னை முதலிடம் பெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் வெளியானபோது சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சில காட்சிகள் வெட்டப்பட்டன. ‘தலைவா’ படத்துக்கும் புலி படம் போல ரிலீஸ் சமயத்தில் சிக்கல் ஏற்பட்டது. தலைப்புக்குக் கீழே இடம்பெற்ற ‘டைம் டு லீட்’ என்ற வார்த்தையை நீக்கிய பிறகே படம் வெளியானது. ‘கத்தி’படம் வெளியாவதற்கு முன்பே பிரச்னை ஏற்பட்டது. அந்தப் படத்தை ராஜபக்ச ஆதரவு பெற்ற ‘லைக்கா’ நிறுவனம் தயாரிப்பதாகக் கூறி படத்துக்குச் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது ‘புலி’ படத்துக்கும் பிரச்னை ஏற்பட்டிருப்பது ரசிகர்களைச் சோர்வடைய செய்துள்ளது. கமல், விஜய் படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் வாங்குவது சரியல்ல என்கிற கமெண்ட்களை சமூகவலைத்தளங்களில் காணமுடிகிறது.

விஜய் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து சிக்கல்கள் வருவது ஏன்? கியூப் பிரச்னைகளை முன்பே சரிசெய்திருக்க முடியாதா, ரிலீஸ் சமயத்தில் ஏன் வருமானவரிச் சோதனை நடைபெறவேண்டும் என்கிற கேள்விகளை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com