சந்தானம் ஜோடியாக மும்பை மாடல்!

சமீபமாக முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களை ஏற்காமல்,  முழுக்க முழுக்க தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடித்து வருகிறார் சந்தானம். "கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
சந்தானம் ஜோடியாக மும்பை மாடல்!
Updated on
1 min read

சமீபமாக முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களை ஏற்காமல்,  முழுக்க முழுக்க தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடித்து வருகிறார் சந்தானம். "கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் படத்துக்கு "தில்லுக்கு துட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் வடிவத்திலும் பேய்கள் உலா வரும் கிராமப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தானத்துக்கு ஜோடியாக பலர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், மும்பை மாடல் அழகி சுனாயா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நகைக்கடை விளம்பர படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் சுனாயா. கௌரவ் சுக்லா, ஆனந்த்ராஜ், கருணாஸ், ராஜேந்திரன், சுஜாதா, "லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். சிறிது இடைவெளிக்குப் பின் சீர்காழி சிவசிதம்பரம் இப்படத்துக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். "லொள்ளுசபா' தொடரின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com