

பெண் இயக்குநர் வரிசையில் அடுத்து கவனம் ஈர்க்க வருகிறார் உஷா கிருஷ்ணன். இயக்குநர் சுசீந்திரனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய இவர், "ராஜா மந்திரி' படத்தின் மூலம் திரையுலகம் காண்கிறார்.
எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் பிஜி மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. "மெட்ராஸ்' கலையரசன், காளி வெங்கட், ஷாலின், வைஷாலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர்... ""அண்ணன் தம்பி உறவு ஒரு பக்கமும், அவர்களுக்குள் உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. தமிழ் சமூக வாழ்க்கையில் குடும்ப உறவுகள் அதி முக்கியமானது. அதிலும், அண்ணன் - தம்பி உறவு என்பது முக்கியமான உறவாகும். மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம் இயங்கினாலும், சந்தர்ப்பங்களால் விட்டுக் கொடுக்காத உறவு அண்ணன் - தம்பி உறவு. அந்த உறவுகளுக்கிடையில் நடக்கும் பாசம், பொருளாதாரம், காதல் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களையும் எடுத்து வைக்கும் படமாக இது வந்துள்ளது. கும்பகோணம், மன்னார்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஏப்ரலில் படம் வெளியாகிறது'' என்றார் உஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.