இயக்குனர் மணிரத்னத்தின் புதிய படம் ‘காற்று வெளியிடை’

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹிதாரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’
Updated on
1 min read

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹிதாரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடம் ஏற்கிறார். வழக்கம் போல படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து. இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் பார்வை அதிதியின் மீது படிந்திருக்க போர் விமானங்களும் புறாக்களும் சூழ்ந்திருக்கிறது. அசத்தலான இந்த ஃபர்ஸ்ட் லுக் மணிரத்னம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியும் படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பையும் அளித்துள்ளது.

’இது என்னுடைய கனவுப் பயணம். உங்களுடைய ஆசி தேவை என்ற வாசகத்துடன் இந்தப் போஸ்டரை அதிதி ராவ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய டிவிட்டரின் மணிரத்னத்துடன் தன்னுடைய அடுத்த படம் என்று கூறியுள்ளார். வெளியான சில மணி நேரத்திற்குள் சமூக வலைத்தளங்களில் உடனடியாக ஷேர் செய்யப்பட்டு, ட்ரெண்டாகிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com