‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு இசை வெளியீட்டு விழா கிடையாது!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்துக்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2016, 10:18 am

ஐஏஎன்எஸ்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்துக்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்கா படத்தையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கபாலி படத்தின் "டீசர்' அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12 அன்று கபாலி பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

கபாலி படத்துக்கு மிகப்பெரிய அளவில் இசைவெளியீட்டு விழா நடத்தப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்த விழாவும் கிடையாது. இணையம் வழியாகப் பாடல்கள் வெளியிடப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி தற்போது அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்துவருகிறார். ஜூன் 12 அன்று அவரால் சென்னைக்குத் திரும்பமுடியாது. அவர் இல்லாமல் பாடல்கள் வெளியீட்டு விழாவையும் நடத்தமுடியாது. அதனால் விழா எதுவுமின்றி இணையம் வழியாகப் பாடல் வெளியிடப்படுகிறது என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் படம் ஜூலை 1 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி அந்தத் தேதியில் வெளியாகாது என்றும் அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.