என் காதல் எப்போதும் உண்மையானது: டிவி நடிகர் சாய் பிரசாந்தின் உருக்கமான தற்கொலைக் கடிதம்!

சாய் பிரசாந்த் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை காவல்துறை கைப்பற்றி உள்ளது. அதில், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் சாய் பிரசாந்த் கடிதம் எழுதியுள்ளார். தன் மனைவிக்கு அவருடைய நகைகளுடன் கூடுதலாக ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என்று எழுதியுள்ளார். கடிதத்தில், தனக்கு சின்ன திரையில் வாய்ப்பளித்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
என் காதல் எப்போதும் உண்மையானது: டிவி நடிகர் சாய் பிரசாந்தின் உருக்கமான தற்கொலைக் கடிதம்!
Published on
Updated on
1 min read

தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாய் பிரசாந்த். அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்த சாய் பிரசாந்த், மன உளைச்சல் காரணமாக இந்தத் துயர முடிவை மேற்கொண்டுள்ளார்.

சாய் பிரசாந்த் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை காவல்துறை கைப்பற்றி உள்ளது. அதில்,

சுஜிதாவுக்கு... உன் மீது அதிக அளவில் காதல் வைத்திருந்தேன். என் காதல் எப்போதும் உண்மையானது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமல்ல, நானே காரணம் என்று உருக்கமாக எழுதியுள்ளார். தன் மனைவிக்கு அவருடைய நகைகளுடன் கூடுதலாக ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என்றும் எழுதியுள்ளார். தனக்கு சின்ன திரையில் வாய்ப்பளித்தவர்களுக்கு அவர் கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் சமீபத்தில் சுஜிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாய் பிரசாந்த். இவர்களுக்கு ரக்‌ஷிதா என்கிற ஒரு மகள் உண்டு. 

சாய் பிரசாந்தின் பெற்றோர் ஓசூரில் வசித்து வருகிறார்கள். தாயார், லலிதா சுபாஷ், பாஜக முன்னாள் மாநில துணைத் தலைவராகப் பணியாற்றியவர். தணிக்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

சாய் பிரசாந்தின் தற்கொலையால் சின்ன திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது. குடும்பம் மற்றும் பணப் பிரச்னையால் தவிக்கும் சின்ன திரை நட்சத்திரங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

சாய் பிரசாந்த் கடைசியாக எழுதியதாக இணையத்தில் வெளியாகியுள்ள கடிதம்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com