கங்கனா ரணவத் ஜான்ஸி ராணியாக கலக்கப் போகும் ‘மணிகர்ணிகா- தி குயின் ஆஃப் ஜான்ஸி’!

பாகுபலி 1&2 கதைகளை எழுதியவரான விஜயேந்திரப் பிரசாத் திரைக்கதை எழுத இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கங்கனா ரணவத் வீரமங்கை ஜான்ஸி ராணியின் வாழ்க்கைப் படத்தில் ஜான்ஸியாக நடிக்கவிருக்கிறார்
கங்கனா ரணவத் ஜான்ஸி ராணியாக கலக்கப் போகும் ‘மணிகர்ணிகா- தி குயின் ஆஃப் ஜான்ஸி’!
Updated on
1 min read

பாகுபலி 1&2 கதைகளை எழுதியவரான விஜயேந்திரப் பிரசாத் திரைக்கதை எழுத இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கங்கனா ரணவத் வீரமங்கை ஜான்ஸி ராணியின் வாழ்க்கைப் படத்தில் ஜான்ஸியாக நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் 100 வது திரைப்படமான கெளதம புத்ரா சதகர்ணியை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த க்ரிஷ்க்கு இது முதல் இந்திப் படமல்ல. முன்பே நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து  'கப்பர் இஸ் பேக்' என்றொரு திரைப்படத்தை 2015 ல் இயக்கி இருக்கிறார் க்ரிஷ். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வகையில் க்ரிஷ்க்கு இது இரண்டாவது இந்திப் படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று வாரணாசியில் துவங்கவிருக்கிறது. படப்பிடிப்பு துவங்கும் முன் படத்தைப் பற்றி செய்தியாளர்களுக்கு அறிவிக்க வாரணாசியின் காசிகட்டில் வழக்கமான பிரஸ் மீட் ஒன்று நடைபெறவிருக்கிறது. திரைப்படம் லாஞ்ச் செய்யப்பட்டதும் கங்கனாவுக்கு ஜான்ஸி ராணி வேடத்தில் 20 அடி நீளத்தில் பிரமாண்ட கட் அவுட் ஒன்றை அங்கு வைக்கவிருக்கிறார்களாம். படப்பிடிப்பு கங்கா ஆரத்தியுடன் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக 19 ஆம் நூற்றாண்டை நினைவுறுத்தும் செட்டுகள் காசியில் போடப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் போராட்ட வீரங்கனைகளில் ஒருவரான ஜான்ஸி ராணி லக்‌ஷ்மி பாயின் வாழ்வை சித்தரிப்பதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த திரைப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தி மட்டுமல்ல தெலுகு, தமிழ் என மும்மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com