வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் தனது இரங்கலையும், பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயின் 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகியப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
2019 தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதர பாடல்கள் வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் ரிலீஸாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு?

ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் பெரிய முன்னேற்றம்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


