ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள உயிரே இணையத் தொடர்: ரகசியம் உடையும்போது குடும்பமும் உடையுமா?

ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடந்து இறுக்கமான மனநிலையில் உள்ள மக்களை மகிழ்விக்கும் நோக்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் புதிய தொடர்கள் வெளியாகியுள்ளன.
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள உயிரே இணையத் தொடர்: ரகசியம் உடையும்போது குடும்பமும் உடையுமா?
Published on
Updated on
1 min read

ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடந்து இறுக்கமான மனநிலையில் உள்ள மக்களை மகிழ்விக்கும் நோக்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் புதிய தொடர்கள் வெளியாகியுள்ளன. இதனால் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காண விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஜீ5.  

ஆட்டோ ஷங்கர், காட்ஸ் ஆஃப் தர்மபுரி போன்ற இணையத் தொடர்கள் மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்ற நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள உயிரே என்கிற புதிய இணையத் தொடர், ரசிகர்களுக்கு மகத்தான அனுபவத்தைத் தரவுள்ளது. இந்தத் தொடர்களை ஜீ5 செயலியிலும் அதன் இணையத்தளங்களிலும் தற்போது இலவசமாகக் காண முடியும். ஜீ5 ஓடிடி தளத்தில் தொலைக்காட்சித் தொடர்கள், இணையத் தொடர்கள், மெர்சல், உத்தம வில்லன், விக்ரம் வேதா, ஓ மை கடவுளே போன்ற பிரபல தமிழ்ப் படங்கள், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

ஜீ5-யில் சமீபத்தில் வெளியாகியுள்ள உயிரே தொடரின் கதை - முன்னாள் ராணுவ வீரரான ராகவனுக்கு அன்பான மனைவி, மூன்று மகள்கள் என அழகான ஒரு குடும்பம் உள்ளது. ஆனால் இந்தக் குடும்பத்தை வலம் வரும் ஒரு ரகசியம், குடும்பத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கிறது. ராகவன் குடும்பம் இந்தச் சிக்கலில் இருந்து மீண்டது எப்படி என்பதை இந்தத் தொடரில் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான புரவலன், அஸ்வினி ஆகியோர் இத்தொடரில் நடித்துள்ளார்கள். மையக் கதாபாத்திரங்களில் அரவிந்த் நாயுடு, குணா, இந்திரா போன்றோரும் மலேனி, நிஷா குமார், ஜேம்ஸ் குமார், தவநேசன் போன்ற நடிகர்களும் நடித்துள்ள இந்தத் தொடரை அப்பாஸ் அக்பர், குமரன் சுந்தரம் இயக்கியுள்ளார்கள். இத்தொடரில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அற்புதமான பின்னணி இசையும் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. 

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி, 80களின் வாழ்க்கையைக் கண்முன் நிறுத்திய ஆட்டோ ஷங்கர் என்கிற அற்புதமான இணையத் தொடர், எம்டிவி - ஐடபிள்யூஎம் விருதை வென்றது. அதேபோல உயிரே தொடரும் ரசிகர்களின் மனத்தை அள்ளி விருதுகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ5 ஓடிடி தளத்தில் பிராந்திய மொழிகளில் உருவான தொடர்கள் அதிகமாக வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி ரேட்டிங்கில் முதலிடம் பெற்ற செம்பருத்தி, சத்யா, பூவே பூச்சுடவா, யாரடி நீ மோகினி போன்ற தொடர்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றதைப் போல அடுத்ததாக மற்றொரு தரமான தொடரான உயிரே-வையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

ஜீ5 ஓடிடி தளத்தில் ரசிகர்களின் ரசனைகளைப் பிரதிபலிக்கும் தொடர்களை இனி எங்கும் எப்போதும் இலவசமாக நீங்கள் பார்க்கலாம். தயாராக இருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com