நாளை (ஆகஸ்ட் 6) வெளியாகிறது 'நவரசா’
நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படம் நாளை நெட்-ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படம் நாளை நெட்-ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு உதவும் விதமாக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகியோர் நவரசா திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் 'டிக்கிலோனா'
கோபம், சிரிப்பு, வெறுப்பு, அழுகை,ஏமாற்றம் உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டுள்ள 9 குறும்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் நாளை நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...