கங்குலியை நேரில் நலம் விசாரித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா

ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் நலம் விசாரித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் நலம் விசாரித்தார்.

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது. 

கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, கங்குலி வீடு திரும்பினாா். இந்நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மருத்துவமனை வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலியை நேரில் நலம் விசாரித்தார். 

ஜனவரி 2-ம் தேதி ஆஞ்சியோ சிகிச்சை தரப்பட்ட நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், 2-வது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com