நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களும் பெரிதளவில் ஹிட் அடித்துள்ளன. இசை வெளியீட்டு விழா இல்லாததால், ரசிகர்களுக்குப் புதிதாக அப்டேட் கொடுக்க வேண்டிய நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உள்ளது.
பீஸ்ட் படத்துடன் திரையரங்குகளில் கேஎஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெளியாகிறது. இதன் டிரெய்லர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியாகிறது.
இதையும் படிக்க | நடிகர் ஆதியுடன் நிச்சயதார்த்தம்
இதற்கு போட்டியாக, பீஸ்ட் படத்திலிருந்து இதுவரை வெளிவராத புகைப்படத்தினை இன்னும் 3 மணி நேரத்தில் வெளியிடுவோம் என சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
அந்த வகையில், துப்பாக்கியை பிடித்தபடி மாஸான லுக்கில் விஜய் போஸ் கொடுக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.