
‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவையொட்டி நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணா, சத்தியராஜ், ராணா டகுபதி ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்றப் படம் ‘பாகுபலி’. மக்களிடையே பரவலான கவனத்தைப் பெற்ற வரலாற்று ரீதியான படமும் இதுவே. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி 7 வருடம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடிகை தமன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
7 வருடம் முடிந்தும் மக்கள் என்னை அவந்திகா என்று அழைப்பது அதிசயமாக இருக்கிறது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் திரைப்படத்தில் நானும் பங்குப் பெற்றதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
Even after 7 years when people call me Avantika, it feels surreal. I feel proud to be a part of a film franchise that has made an impact all over the world. #7YearsOfBaahubaliPride @ssrajamouli @Shobu_ @RanaDaggubati @MsAnushkaShetty @arkamediaworks @karanjohar @DharmaMovies pic.twitter.com/zrcQDhS0Mg
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 10, 2022