
யாஷ் ராஜ் தயாரிப்பில் கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வானி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப் படத்தில் ரன்பீர் கபூர் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.
இப்படம் ஜூலை 22 ஆம் நாள் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூரவ தகவல் வெளியாகியுள்ளது.
ஷம்சேரா 1800களில் வாழந்தவர் கதை. ஆங்கிலேய அதிகாரிகளி எதிர்த்த பழங்குடியின மக்களுக்காக போராடும் வீரனின் கதை. போராளியை சிறப்பிடித்து வைத்துள்ள இடத்தில் இருக்கும் கொடூரமான வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார்.
இத்திரைப் படத்தின் புரமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழச்சியில் புகழ்பெற்ற சிவாங்கியிடன் ஷம்சேரா படத்தின் கதாநாயகர் ரன்பீர் கபூர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன்பீருடன் இருக்கும் புகைப்படத்தினை தனது டிவிட்டர பக்கத்தில் வெளிட்டு சிவாங்கி கூறியதாவது:
இப்படியாக எனது முதல் மும்பை பயணம் தொடங்கியது. இதன் உண்மையான காரணத்தை உங்களிடம் பகிர முடியாமல் இருக்க முடியவில்லை. ஷம்சேரா படப் புரமோஷன்.
Thats how my first Mumbai trip went
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) July 11, 2022
Cant wait to share the real deal with you all#ranbirkapoor #shamshera promotions@yrf @Meta @instagram @oodagaa @vbzu pic.twitter.com/WH808ot7Yy