
ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரம். இந்த படத்தின் தீத்திரியாய் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் பிரமாஸ்திரா. தமிழில் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஆலியா பட் தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலைப் பகிர்ந்து தமிழில் எழுதியிருந்ததாவது:
எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும் தீத்திரியாய் மூலமா!
எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும்
— Alia Bhatt (@aliaa08) July 17, 2022
தீத்திரியாய் மூலமா!https://t.co/XjAuhAVfac