
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஊர்வசி ரெளடேலா, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.
மொசலோ மொசலு, வாடிவாசல் என இப்படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தற்போது போபோபோ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, இந்தப் படத்துக்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 28ஆம் நாள் வெளியாக இருக்கிறது.
#TheLegendSaravanan starring #TheLegend Movie #PoPoPo Video Song streaming now https://t.co/XFm88JfSwL
— dir_jdjeryofficial (@jdjeryofficial) July 18, 2022
Worldwide release on July 28th#TheLegendSaravanaStoresProduction #TheLegend #TheLegendFromJuly28@jdjeryofficial @Jharrisjayaraj @Gopuram_Cinemas #Anbuchezhian
pic.twitter.com/pMXYAHjgLy