லியோ எப்படி இருக்கிறது?

லியோ திரைப்படத்தைக் கண்ட ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
லியோ எப்படி இருக்கிறது?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிவுள்ளது.

நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் உள்ளிட்ட பல பிரபலங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியுள்ளது.

இருப்பினும், கேரளம், கர்நாடகத்தில் அதிகாலை 4 மணிக்கும், ஆந்திரம், தெலங்கானாவில் அதிகாலை 5 மணிக்கும் படம் வெளியாகியுள்ளது. அண்டை மாநிலங்களின் எல்லையோரம் உள்ள சில திரையரங்குகளில் தமிழிலும் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிகாலைக் காட்சியைக் கண்ட ரசிகர்கள் லியோ திரைப்படத்தின் முதல்பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதியில் படக்குழு கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் கருத்துக்களைக் கூறி வருவதால் லியோ கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com