100வது நாளைக் கொண்டாடிய சின்னத்திரை நடிகர்கள்!

பிரவீன் ஆதித்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி பாஸ்கர்.
100வது நாளைக் கொண்டாடிய சின்னத்திரை நடிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடர் 100 நாள்களைக் கடந்துள்ளது.

இதன் 100வது நாள் எபிஸோடை சக்திவேல் தொடரின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் குழுவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் பிரவீன் ஆதித்யா (வேலன்) நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி பாஸ்கர் (சக்தி) நடிக்கிறார்.

100வது நாளைக் கொண்டாடிய சின்னத்திரை நடிகர்கள்!
பாலிவுட் நடிகைகளை கலாய்த்த சின்னத்திரை நடிகை!
dinamani

சமூகத்தில் தன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சக்தி என்ற பெண், ரெளடித்தனம் செய்துகொண்டு திரியும் வேலனை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் சவால்களே சக்திவேல் தொடரின் கதைக்களம்.

இந்தத் தொடர் கடந்த டிசம்பர் 4 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே சக்திவேல் தொடர் வெற்றிகரமாக 100வது நாள்களைக் கடந்துள்ளது. 100வது நாளைக் கொண்டாடும் வகையில் தொடரில் நடித்த நடிகர் - நடிகைகள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் ஒன்று கூடி இதனைக் கொண்டாடினர்.

குழுவாக புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்துக்கொண்டனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com