
விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் இன்று(ஆக. 16) வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஜொனாதன் மோஸ்டோ இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கலாம் என்ற தகவலும் முதலில் வெளியாகின. இந்தப் படத்தில் கர்ட் ரஸ்ஸல் , ஜேடி வால்ஷ், கேத்லீன் குயின்லன் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதேபோல, கார் சேசிங் காட்சிகள், ஒரு சாலையில் தொடர்ச்சியாக கதை நகருவது போலவும், தொடர்ந்து வெளியான நடிகர், நடிகைகளின் போஸ்டர் காட்சிகளும் கிட்டத்தட்ட பிரேக் டவுன் படத்தில் மறு உருவாக்கமாக்க இருக்கலாம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இன்று மதியம் 1.09 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது, படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்கான வெளியீட்டு தேதியாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.