ஓடிடி தளத்தில் மீரா ஜாஸ்மினின் குயின் எலிசபெத்!

குயின் எலிசபெத் திரைப்படம் ஜீ 5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் மீரா ஜாஸ்மினின் குயின் எலிசபெத்!

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற குயின் எலிசபெத் திரைப்படம் ஜீ 5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தை எம்.பத்மகுமார் இயக்கியுள்ளார். நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்களுடன், நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் வி.கே. பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜீ 5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களைக் கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எலிசபெத் திரைப்படம் வெளியாகியுள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடிப் படமாக, இப்படம் உருவாகியுள்ளது.

திருமணமாகாத ஒரு நடுத்தர வயத்துப்பெண்ணின் வாழ்க்கையை, காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்தப்படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.

இது தொடர்பாக பேசிய இயக்குநர் பத்மகுமார்,

குயின் எலிசபெத் படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தது.

மீரா ஜாஸ்மின் கூறியதாவது,

குயின் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எலிசபெத், கண்டிப்பான நடத்தை கொண்ட, வலுவான, சுதந்திரமான பெண். எலிசபெத் கதாபாத்திரம் என் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரைக்கு வருகிறேன் எனவே பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஆர்வம் உள்ளது.

நடிகர் நரேன் கூறியதாவது,

தேசம் முழுக்க படத்தைக் கொண்டாடியதுடன் என் கதாபாத்திரத்தைத் தனித்து பாராட்டியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நடிகை மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத அனுபவம். ஷீட்டிங்கில் நாங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டோம். இயக்குநர் எம். பத்மகுமாரின் பார்வையும் வழிகாட்டுதலும் மிகவும் உதவிகரமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com