‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை கருத்துக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!
Published on
Updated on
1 min read

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை கருத்துக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறியதும், ஆட்சியைக் காப்பாற்ற தன் ஆதரவு எம்எல்ஏக்களை சசிகலா 10 நாள்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

அதைக் குறிப்பிட்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏவி ராஜு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், “கூவத்தூரில் எத்தனை நடிகைகளைக் கூட்டி வந்தார்கள் தெரியுமா? அதில் எம்எல்ஏ வெங்கடாசலம் நடிகை திரிஷாதான் வேண்டும் என அடம்பிடித்தார். அதனால், நடிகர் கருணாஸ் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தார்கள்.” எனக் கூறினார்.

‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!
’கேவலமான மனிதர்கள்..’ கூவத்தூர் குற்றச்சாட்டுக்கு த்ரிஷா பதிலடி!

இந்தக் குற்றச்சாட்டு த்ரிஷா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் சேரன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கருத்துகள் தெரிவித்தனர்.

நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கேவலமான மனிதர்களைத் திரும்ப திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஏவி ராஜு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் திரைப்பட நடிகைகளை விமர்சிக்கவில்லை. த்ரிஷா அம்மாவின் மனம் புண்படும்படி பேசியிருந்தால், சமூக வலைதளம் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com