தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் சீரியல் கதாபாத்திரங்கள்!

தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் சீரியல் கதாபாத்திரங்கள்!

தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஓர்மேக்ஸ் மீடியா நிறுவனம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த தரவுகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில் மக்களால் மிகவும் அதிகமாக விரும்பப்படும் சின்னத்திரை பாத்திரங்கள் குறித்து தரவுகளை சேகரித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில், 5வது இடத்தில் சிங்கப்பெண்ணே தொடரின் ஆனந்தி பாத்திரம் உள்ளது. இந்தத் தொடரில் மணீஷா மகேஷ் நாயகியாக நடித்துள்ளார். கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார்.

4வது இடத்தில் சுந்தரி தொடரின் சுந்தரி பாத்திரம் உள்ளது. இந்தத் தொடரில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடரை அழகர் சாமி இயக்குகிறார்.

3வது இடத்தில் சிறகடிக்க ஆசை தொடரின் முத்துக்குமார் பாத்திரம் உள்ளது. இந்த பாத்திரத்தில் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ். குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார்.

2வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடரின் பாக்கியலட்சுமி பாத்திரம் உள்ளது. இந்தத் தொடரில் நடிகை சுசித்ரா இயக்குகிறார். இயக்குநர் டேவிட் இந்தத் தொடரை இயக்குகிறார்.

முதலிடத்தில் கயல் தொடரின் கயல் பாத்திரம் உள்ளது. இந்தப் பாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இத்தொடரை பி. செல்வம் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com