புஷ்பா - 2 படக்காட்சி நெரிசலில் பெண் பலி: குற்றப்பத்திரிகையில் ஏ11 நபராக அல்லு அர்ஜுன் சேர்ப்பு!

பெண் உயிரிழந்த வழக்கில் நடிகா் அல்லு அா்ஜுன் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது பற்றி...
அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்Center-Center-Hyderabad
Updated on
1 min read

ஏ11 குற்றம் சுமத்தப்பட்ட நபராக அல்லு அர்ஜுன் சேர்ப்பு :

புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த வழக்கில் நடிகா் அல்லு அா்ஜுன் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது நடிகா் அல்லு அா்ஜுன் திரையரங்குக்கு திடீரென வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயதுப் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது தொடா்பான வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அல்லு அர்ஜுன்.இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், குற்றப்பத்திரிகை சனிக்கிழமை(டிச. 27) சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஏ11 குற்றம் சுமத்தப்பட்ட நபராக அல்லு அர்ஜுன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Summary

Allu Arjun Named In Pushpa Stampede Chargesheet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com