

கன்னடத்தில் இரு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படத்தை இயக்கிய ஹேமந்த் ராவின் அடுத்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.
‘666 ஆபரேசன் ட்ரீம் தியேட்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சாண்டல்வுட்டின் முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் நடிப்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் பிரியங்கா மோகனின் போஸ்டர்கள் சனிக்கிழமை(டிச. 27) வெளியிடப்பட்டுள்ளன.
பிரியங்காவின் முதல் போஸ்டர் காலை 11.11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்தொடர்ச்சியாக இரண்டாவது போஸ்டரும் மாலை வெளியிடப்பட்டது. படத்தில் இளம்பெண் கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிப்பதை மேற்கண்ட இரு போஸ்டர்கள் மூலம் அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.