உன்னுடனேயே எப்போதும்..! -மகேஷ் பாபுவின் காதல் பதிவு

தனது மனைவி மீதான காதலை வெளிப்படுத்தியுள்ள மகேஷ் பாபு
மனைவியுடன் மகேஷ் பாபு
மனைவியுடன் மகேஷ் பாபுMahesh Babu instagram
Published on
Updated on
1 min read

நடிகர் மகேஷ் பாபு இன்று(பிப். 10) தனது திருமண நாளை கொண்டாடுகிறார்.

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் ஆகிய இருவருக்குமிடையே கடந்த 2000-ஆம் ஆண்டு ‘வம்ஷி’ படப்பின்போது காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தனது 20-ஆவது திருமண நாளையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”நீயும் நானும் 20 அழகான ஆண்டுகளாக... என்றென்றும் உன்னுடன் (என்எஸ்ஜி)நம்ரதா!” என்று தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் தம்பத்திக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதியை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் திருமண நாள் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com