சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

மலையாள சினிமாவில் சாய் அபயங்கர்! அடுத்து என்ன தெரியுமா?

சாய் அபயங்கரின் முதல் மலையாள படம் பற்றி...
Published on

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் மலையாள திரைப்படம் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது அடுத்த படைப்பு குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாய் அபயங்கர் முதல்முறையாக மலையாள படத்துக்கு இசையமைக்கிறார். ‘பல்டி’ திரைப்படத்தின் மூலம் அவர் ஒரு மலையாள இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட இளம் நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘பல்டி’ ஓணம் வெளியீடாக கேரளத்தில் திரைக்கு வரவிருக்கிறது.

இத்திரைப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற சுவாரசிய தகவலை அப்படக்குழு விடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ள அந்த விடியோவில் மலையாள முன்னணி நட்சத்திரம் ‘மோகன்லால்’ குரல் கொடுத்துள்ளார்.

‘மோனே சாய்... வெல்கம் டூ மலையாள சினிமா” என்று தனக்கே உரிய தொனியில் மோகன்லால் பேசியிருப்பது ஹைலைட் ஆக அமைந்துள்ளது.

இது சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ள 4-ஆவது திரைப்படமாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சாய் அபயங்கரின் ரசிகர்கள் குஷியில் இருக்க, இன்னொருபுறம் அவரது அடுத்த சிங்கிள் ஆல்பம் பாடல் வரும் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவிருப்பதையும் சாய் அபயங்கர் பகிர்ந்திருக்கிறார். புது ஆல்பத்துக்கு ‘விழி வீக்குற’ எனப் பெயரிட்டுள்ளார். இது அவரது 4-ஆவது ஆல்பம் பாடலாகும்.

Summary

Sai abhyankkar Malayalam Cinema Balti the movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com