நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த்கோப்புப் படம்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? ஜாமீன் மனு நாளை விசாரணை!

இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு...
Published on

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கான விடை நாளை(ஜூலை 8) தெரிந்துவிடும்.

கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா். அதனைத்தொடர்ந்து ஜூன் 26-ஆம் தேதி இதே வழக்கில் நடிகா் கிருஷ்ணாவும் போதைப்பொருள் விநியோகித்த கெவினும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

actor Krishna
நடிகா் கிருஷ்ணாகோப்புப்படம்

இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், மேற்கண்ட இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. நீதிபதி நிா்மல்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வழக்கில் புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படவுள்ளது.

Summary

Actors Srikanth, Krishna likely to be released on bail? Verdict tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com