‘மின்னல் முரளி’ நாயகியின் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?

மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜின் புதிய படம் அறிவிப்பு...
மின்னல் முரளி படத்தில்  ஃபெமினா ஜார்ஜ்
மின்னல் முரளி படத்தில் ஃபெமினா ஜார்ஜ்படம் | ஃபெமினா ஜார்ஜ் பதிவு
Updated on
1 min read

‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஃபெமினா ஜார்ஜின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த ‘மின்னல் முரளி’ படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் 2021இல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

படம் | ஃபெமினா ஜார்ஜ் பதிவு

இப்படத்தில் நடித்த ஃபெமினா ஜார்ஜ் புதிதாக ‘கரக்கம்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதனை அவர் தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஸ்ரீநாத் பாசி கதாநாயகனுக்கு இணையானதொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கரக்கம் பட போஸ்டர்
கரக்கம் பட போஸ்டர்

கிம்பெர்லி ட்ரிணிடேட் மற்றும் அஞ்குஷ் சிங் தயாரிப்பாளர்களாக உள்ள இப்படம் ப்ளாக் டர்ட்டில் ப்ரொடக்சன்ஸ் மற்றும் ரோன் ஸ்டார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் பேனர்களின் கீழ் உருவாகவுள்ளது. தமிழ் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

படத்தின் முன்னோட்ட க்ளிம்ஸ் விடியோவை படக்குழு இன்று(ஜூலை 7) வெளியிட்டுள்ளது. அதில், இரவு நேரத்தில் மயானத்துக்கு காரில் ஒரு குழு செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஒரு ஹாரர் த்ரில்லர் படமாகவே ‘கரக்கம்’ எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Summary

Karakkam : Femina George's next Malayalam movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com