
நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் எனப் பெயர் சூட்டியுள்ளனர் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் - எமி ஜாக்சன் தம்பதியினர்.
தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் சிறப்பக நடித்து பலராலும் பாராட்டப்பட்டார்.
முன்னதாக, ஜார்ஜ் பனாயியோடௌவை திருமணம் செய்துகொண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்திருந்தார் எமி ஜாக்சன். எனினும், கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில், அவரும் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் கர்ப்பமான நிலையில் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.