

நடிகர் ஷாருக் கான் தமது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஷா ருக் கான் இன்று 60 ஆவது வயதைக் கொண்டாடுகிறார். ஷா ருக் கான் பிறந்தநாளை முன்னிட்டு கிங் திரைப்படத்தின் பெயர் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பிறந்த நாளன்று அவரைக் காண திரளான ரசிகர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பது வழக்கம். ஆனால், இம்முறை ரசிகர்களை தம்மால் சந்திக்க முடியாமல் போனதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஷாருக் கான் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெளியே வந்து நின்று உங்கள் அனைவரையும் பார்க்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். காரணம், பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றனர். இதற்காக உங்களிடம் ஆழ்ந்த வருத்த்த்தை தெரிவிக்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதைக் கருதி நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை புரிந்துகொண்டு என் மீது நம்பிக்கை பூண்டுள்ளமைக்கு நன்றி... நீங்கள் என்னைப் பார்க்க முடியாமல் தவிப்பதைவிட நான் உங்களை பார்க்க இயலாமல் போனது மிகுந்த வருத்தம். லவ் யூ...” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.