எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

முனிஷ்காந்த் நடிப்பில் வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்...

News image
Updated On :21 நவம்பர் 2025, 10:36 am IST

மிடில் கிளாஸ்

3/5

நடிகர்கள் முனீஷ்காந்த் விஜயலட்சுமி நடிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில்  வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் படம் வெற்றியா தோல்வியா?

படத்தின் கதைக்களம் என்னவென்றால் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமிக்கு முனீஷ்காந்தின் தந்தையால்  1 கோடி ரூபாய் காசோலை ( cheque ) கிடைக்கிறது. அந்த Cheque தங்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அந்தக்க் குடும்பம் இருக்கும்போது எதிர்பாராத விதமாக அந்த Cheque-ஐ முனீஷ்காந்த் தொலைத்துவிடுகிறார். அந்த Cheque-ஐ  கண்டுபிடித்தார்களா?, அந்த குடும்பம் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட்டதா என்பதே படத்தின் கதைக்களமாக அமைந்திருக்கிறது.

மிடில் கிளாஸ் படத்தில் முனிஷ் காந்த்

மிடில் கிளாஸ் படத்தில் முனிஷ் காந்த்

படத்தின் கதாநாயகனான முனீஷ்காந்த் ஹீரோவாக கலைக்கச்சிதமாக இந்தக் கதைக்குள் பொருந்தியுள்ளார். ஒரு பொறுப்பான மிடில் கிளாஸ் ஆணின் பிரதிபளிப்பாகவும் 2 குழந்தைகளின் தந்தையாகவும் மனைவியின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் கணவனாகவும் அவர் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மனைவியாக நடித்த விஜயலட்சுமியும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். சிடுசிடுவென எரிந்து விழுகும் குடும்பப் பெண்ணாகவும் ஆங்கங்கே காதலை வெளிப்படுத்தி வெட்கப்படும் மனைவியாகவும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் தாயாகவும் அவரது கதாபாத்திரம் நம் மனதில் நிற்கும் அளவில் இருந்தது. 

படத்தில் குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராதாரவியும் அவ்வப்போது சில காட்சிகளில் எட்டிப் பார்க்கும் காளி வெங்கட்டும் படத்தின் நான்காவது தூணாக செயல்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் இவர்கள் இருவரையும் இன்னும் சற்று நேரம் அதிகமாக திரையில் காட்டி இருக்கலாம் என்ற ஏக்கம் அனைவருக்கும் எழக்கூடும். 

மிடில் கிளாஸ் படத்தில் நடிகை விஜயலட்சுமி

மிடில் கிளாஸ் படத்தில் நடிகை விஜயலட்சுமி

இவர்களுடன் படம் முழுவதும் முனீஸ்காந்துடன் பயணிக்கும் கோடாங்கி வடிவேலு மற்றும் குரேஷி ஆகியோர்  அவ்வப்போது நம்மை சிரிக்க வைத்து கதையை தொடர்ந்து நகர்த்தி செல்லும் கதாபாத்திரங்களாகவும் இருக்கின்றனர். படத்தின் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் தான் சொல்ல வந்த கருத்தை எளிமையாகவும் சிறப்பாகவும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்  எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்.

ஒரு குடும்பப் படமாக இருந்தாலும் அதற்குள் சில சுவாரசியங்களை ஒளித்து வைத்திருந்தார். இது அவரின் முதல் படமாக இருந்தாலும் எந்த இடத்திலும் படம் மெதுவாக செல்கிறது என்ற எண்ணம் வராத அளவிற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளார். படத்தின் கதை ஒரு திசையை நோக்கி நகர்ந்தாலும் இறுதியில் நமக்கு கிடைப்பதை அனைவரிடமும் பகிர்ந்து நாம் அனுபவிக்க வேண்டும் என்ற இயக்குநர் சொல்லும் கருத்து படத்தை விட்டு விலகாமல் படத்தோடு ஒன்றியிருக்க அவர் செய்த சின்ன சின்ன நுணுக்கங்களும் படத்தின் அழகு பொருளாக அமைந்துள்ளது. 

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

படத்தில் இசையமைப்பாளரான பிரணவ் முனிராஜ் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். நகைச்சுவை காட்சிகளிலும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் தனது பின்னணி இசை மூலம் அக்காட்சிகளை ஒரு படி மேலே உயர்த்திக் காட்டியுள்ளார். படத்தில் அதிகளவில் பாடல்கள் இடம்பெறாவிட்டாலும் கதையோடு சேர்ந்து பயணிக்க தேவையான பின்னணி இசையை இசையமைப்பாளர் கொடுத்திருப்பது ரசிக்கும் வண்ணமே இருந்தது. இருப்பினும்  பாடல்கள் இல்லாதது ஒரு சில இடங்களில் உணர்வுகளை கடத்த கொஞ்சம் தவறவிட்டதாக சிலருக்குத் தோன்றலாம்.

படத்தின் ஒளிப்பதிவாளரான சுதர்சன் ஸ்ரீனிவாஸ் மற்றும் படத்தொகுப்பாளரான சான் லோகேஷ் ஆகியோர் படத்தில் எந்த ஒரு இடத்திலும் நாம் தொந்தரவாகாத அளவிற்கு தங்களது வேலையை செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக இடைவேளைக்குப் பின் வரும் தேடுதல் காட்சிகளில் நாமே தேடுவது போன்ற ஒளிப்பதிவு இருப்பது பாராட்டுதலுக்குரியது.

மிடில் கிளாஸ் படத்தில் ராதாரவி

மிடில் கிளாஸ் படத்தில் ராதாரவி

படத்தின் முதல் பாதியில் ஒரு நடுத்தர குடும்பத்தின் (middle class) வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? அவர்கள் வாழ்வில் எதுவெல்லாம் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்? எதுவெல்லாம் ஒரு குடும்பத்தில் பிரச்சினையாக வந்து அமையும்? என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் காட்டியிருக்கின்றனர். சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் முதல் பாதி முழுவதும் நிறைந்திருக்கிறது. சிறுவயதில் எல்லோரும் வீட்டில் செய்த சேட்டைகள் மற்றும் வாழ்ந்த வாழ்க்கை முறையை இப்படம் நினைவுபடுத்துவது மற்றுமொரு ப்ளஸ்!. 

இடைவேளைக்குப் பின் வரும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் சென்டிமெண்ட் கலந்தும் இருப்பது படத்தை அடுத்த கோணத்திற்கு கொண்டு செல்கிறது. படத்தில் நகைச்சுவை மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளை இயக்குநர் சிறப்பாக கையாண்டிருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது!

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

ஒருவன் தனக்குப் பிடித்ததுபோல் வாழ்வதா அல்லது இந்தச் சமூக அந்தஸ்துக்காக வாழ்வதா என்பதை இப்படத்தின் மூலம் விவாதித்திருக்கிறார் இயக்குநநர். ஒட்டுமொத்தமாக அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு Family Entertainer-ஆக திரைக்கு வந்துள்ள இந்த படத்தின் குழுவுக்கு பாராட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.