

விஜய் தேவரகொண்டாவின் கார் திங்கள்கிழமை(அக். 6) விபத்துக்குள்ளானது. எனினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரியளவிலான காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்குச் சென்றுவிட்டு ஹைதராபாத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது. சாலையில் சென்ற இன்னொரு கார் அவரது காரின் மீது பக்கவாட்டில் மோதி உரசியதில், விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு விஜய் தேவரகொண்டா அதில் ஏறிச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.